நீங்கள் அனைவரும் சீனா பெய்ஜிங்கில் நடந்துவரும் ஒலிம்பிக் பற்றி அறிந்திருப்பீர்கள். பற்பலர் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவை இணையத்தின் மூலமாகவும் தொலைக்காட்சிகளின் மூலமாகவும் பார்த்திருக்க வாய்ப்புள்ளது.
இங்கு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டரங்கின் நிழற்படத்தைப் பதிவுசெய்கிறேன். அப்படத்திற்கு ஏற்றார்போல் வெண்பா எழுதுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

6 comments:
விண்மணிகள் கோர்த்ததுபோல் வேட்டின் ஒளிவெள்ளம்
கண்மணிகள் கண்டுக் களிப்புறும் -பெண்மணிகள்
பூக்கும் சிரிப்பன்ன பூத்ததுகாண் விண்வெளியில்
ஈர்க்கும் இளநெஞ்சை ஈண்டு!
அகரம்.அமுதா
ஒளிவெள்ளம் கிள்ளும் மனதை நிதமும்
துளிர்த்திடும் இன்பமதைக் கண்டே மனமும்
களித்தே மகிழ்ந்திட வந்ததே இங்கு
ஒலிம்பிக்கின் சீரிய ஒளி
-- ஜீவ்ஸ்
ஒலிம்பிக் எனப்படும் ஓசைமிகு ஆட்டம்
ஒளிமிக்க உள்ளத்தின் ஆர்வம் - களிக்கும்
உலகமும் காணும் ஒளிவெள்ளக் காட்சி
இலங்கும் படங்கள் அழகு!
------------------------------
பெய்ஜிங் நகரினில் பேரொளிகள் ஒர்மழையாய்
பெய்திடும் காட்சிகள் பார் - மெய்தான்
ஒலிம்பிக் கதனை இனிநாம் பகர்வோம்
'ஒளி'ம்பிக் கென்றே உரை!
பெய்ஜிங் நகரினில் பேரொளிகள் ஒர்மழையாய்
பெய்திடும் காட்சிகள் பார்த்திடு - மெய்தான்
ஒலிம்பிக் கதனை இனிநாம் பகர்வோம்
'ஒளி'ம்பிக் கெனவே உரை!
(அவசரத்தில் முதல் பின்னூட்டத்தில் சில தளைகள்)
ஒளிவெள்ளம் ஊற்றெடுக்கும் படியான அழகிய வெண்பாக்களை அளித்துள்ளீர்கள் இப்னு! வாழ்த்துகள். அடுத்த இடுகையை நீங்கள் செய்யுங்களேன்! தாங்கள் வழங்கும் ஈற்றடிக்கு நாங்களெல்லோரும் எழுதுகிறோம்.!
மின்னல்போல் பூத்து மிளிருமொளி பொன்கூந்தற்
பின்னல்போல் சாலம் புரிந்திடுவே -கன்னலைப்போல்
பெய்ஜிங் ஒலிம்பிக் பெருஞ்சுவையைக் காட்சிகளாய்
தொய்வின்றி தந்திடுதே தான்!
அகரம்.அமுதா
Post a Comment