அறிவு :
மல்லல் உலகம் மகிழ்வாய் மலர்ந்திட
அல்லல் களைந்தே அருந்துயர் போக்கிடு !
கல்லால் நிலையும் காவியம் போற்றிட
சொல்லால் உரைப்பாய் கவி.
அமைதி :
கண்களில் தோன்றும்! கனிவாய் மகிழ்ந்திடும்
பண்களில் பாடிடும்! பாவை அருகினில்
தண்ணெழில் கூட்டிடும் தாரக மந்திரம்
உன்னிதழ் ஊறும் மொழி !
அழிவு :
கூடிய மக்கள் குருவியாய் வீழ்ந்திட
நாடிய உள்ளம் வெடித்தே சிதற
நிலைகலங்கும் நீள்கதையாய் மாறும் நிகழ்வே
குலைநடுக்கும் குண்டுகள் ஏன் ?
விலைபேசும் மக்கள் இனமே ! விடிவதற்குள்
அலைவீசும் ஆழியாய் குண்டுகள் மாற
வலைவீழும் மீனினமாய் மாறும் உடல்கள்
நிலைமீள பக்கம்வா பார்த்து !
செல்வி ஷங்கர்
Tuesday, August 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இங்க என்ன பண்ணோனம் ?
முயற்சிக்குப் பாராட்டுகள்!
இரண்டாம்பாடல் மிகச்சிறப்பு!
"கல்லால் நிலையும் காவியம்
போற்றிட"
_முதல் பாடலின் மூன்றாம்
அடியான இதில் இரண்டாம் சீர் புளிமாவாகவும் மூன்றாம்சீர் கூவிளமாகவும் அமைந்து
மா முன் நிரை வருகிறது;
கலித்தளை வருகிறதே!
நான்காம் பாடலிலும் தளை தட்டுகின்றது!
விடிவதற்குள் அலைவீசும் - இங்கு
காய்முன் நிரை வருவதைக்கவனிக்கவும்!
Post a Comment