izmanam.com -->

Monday, November 10, 2008

வெண்பா: வேட்கை.

வேட்கை

எனக்குத் தெரிவதேயில்லை
நடுநடுங்கும்
ஒரு எளிய சுடரை
எப்படிக் காப்பதென்று

பற்றிக்கொள்
பற்றிக்கொள் எனப்
படபடக்கின்றன
திரைச் சீலைகள்


என்பது நவீனகவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒரு கவிதை. இதையே நான் வெண்பாவில் மாற்றிப்பார்த்தேன்:

நடுநடுங்கும் இச்சுடரை நான்காத் திடத்தான்
விடையொன்று வேண்டுதே உள்ளம் - இடையில்
படபடக்கும் அச்சீலை பேசுவதைக் கேட்பின்
தடையற பற்றுவதாம் தீர்வு.


"ஒரு கவிதையை வெண்பாவாக மாற்றியது இன்னும் அதை அதிக ரசனையுடன்மனதில் இருத்திக் கொள்ளச் செய்தது.." என்றார் அக்குழுமத்தில் ஒரு நண்பர்.

இன்றைக்கு தற்செயலாக கண்ணுற்றபோது பிறிதொரு குழுமத்தில் கவிஞர்
இராஜ.தியாகராஜன் இதில் சில திருத்தங்களைச் செய்துள்ளார். அவருக்கு என் நன்றி.

ஐயா இராஜ.தியாகராஜன் செய்துள்ள திருத்தமும் விளக்கமும்:

இராஜ. தியாகராஜனின் வணக்கம்.
நீண்ட நாட்களுக்குப்பின் இணையத்திற்கு
வருகிறேன். பணிச்சுமை. உங்கள்வினாவிற்கு பதிலோ அன்றி நீங்கள் எந்த
பாடலையொற்றி வெண்பா புனைந்தீர்களோ,நானறியேன் ஆயினும் சிறிது மாற்றங்களுடன் உங்கள் வெண்பா இதோ:

நடுநடுங்கு மச்சுடரை நான்காத் திடவே

விடையொன்றை யுள்ளமது வேண்டும்! - இடையில்

படபடக்குஞ் சீலை பகர்வதையேக் கேட்டுத்

தடையறப் பற்றுவதே சால்பு!

------------குறிப்பு:

நடுநடு = நான்கா

விடை = வேண்டும்

படபட = பகர்

தடை = சால்பு

இவை பொழிப்பு மோனை விகற்பங்கள்
உங்கள் பாடலில்,விடை = வேண்டுதே
மேற்கதுவாய் மோனை விகற்பம்.

படபட = பேசுவதை மோனையாகாது

தடையற = தீர்வு மோனையாகாது.

(இதேபோல எளிய அழகிய புது/நவீனக் கவிதைகளை மரபில் எழுதிப் பார்க்கலாமே என்ற எண்ணத்திலேயே இவற்றை இங்குக் குறிப்பிடுகிறேன். நன்றி)

நண்பர்கள் பின்னூட்டங்களில் எழுதுங்களேன்.





6 comments:

said...

என் முயற்சி:

சுட்டெரிக்கும் ஒற்றைச் சுடரேயேன் இந்நடுக்கம்?
எட்டநின்று பார்த்துனை எப்படிக் காப்பேன்நான்?
இப்படியும் அப்படியும் தானசைந்து பற்றிக்கொள்,
பற்றிக்கொள் சீலையெனைத் தான்.

said...

நல்ல முயற்சி ஜீவா அவர்களே!

சுட்டெரிக்கும் ஒற்றைச் சுடரேயேன் இந்நடுக்கம்?
எட்டநின்று பார்த்துனை எப்படிக் காப்பேன்நான்?
அப்படி இப்படி ஆடி அசைந்திட
தப்பாதெ சீலை தான்.

(ஒன்றுமில்லை, உங்கள் வெண்பாவுக்கு எதுகை மோனை இட்டுப் பார்த்தேன்).

வருகைக்கு நன்றி.

said...

இந்தக் கவிதை தான் என்றில்லை, வேறெந்த கவிதையையும் எடுத்துக்கொண்டோ/எழுதிக்கொண்டோ வெண்பாவாக மாற்றிப்பார்க்கலாம் நண்பர்களே...

said...

அழகிய முயற்சி. வாழ்த்துகள் இப்னு! தியாக ராஜன் அவர்கள் அழகாகவும் நேர்த்தியாகவும் திருத்தங்கள் செய்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகள். மென்மேலும் முயலுக.

ஜீவா அவர்களும் அழகிய முயற்சி செய்துள்ளார். அவருக்கும் என் வாழ்த்துகள்.

said...

நன்று தொடர்ந்து எழுதுங்கள்

said...

நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

சாந்தி