izmanam.com -->

Sunday, November 29, 2009

இணைக்குறள் 1330 :[அதிகாரம் 003: நீத்தார் பெருமை] குறளுக்குக் குறளால் விளக்கம்

21)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
விளக்கக் குறள் :
ஒழுக்கம் சிறந்த துறவியர் நற்பெருமை
சொல்லிஉயர்த் தும்சான்றோர் நூல்


22)
துறந்தார் பெருமை துணைக்கூறி வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
விளக்கக் குறள் :
அ)
துறந்தோரின் நற்பெருமை கூறல்; உலகில்
இறந்தோரை எண்ணுதல் போல்
ஆ)
துறவியர் நற்பெருமை கூறுதலின் ஞாலத்(து)
இறந்தோரை எண்ணுவ(து) எளிது


23)
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டோர்
பெருமை பிறங்கிற்று உலகு
விளக்கக் குறள் :
இருபிறப்பும் தேர்ந்தறிந்து நன்நெறி காப்போர்
பெருமை சிறந்தது(உ)ல கில்


24)
உரனென்னும் தோட்டியான் ஆரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
விளக்கக் குறள் :
அறிவென்னும் அங்குசத்தால் ஐம்புலனும் காப்போர்
துறவென்னும் ஞாலத்து வித்து


25)
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்க்கோமான்
இந்திரனே சாலுங் கரி
விளக்கக் குறள் :
ஐம்பொறி ஆசை அழித்தவன் ஆற்றலுக்கு
இந்திரனே போதியச் சான்று


26)
செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
விளக்கக் குறள் :
அ)
பெரியோர் பெரும்செயல் செய்வார்; சிறியோர்
பெருமைச் செயல்செய்யா தோர்
ஆ)
அருஞ்செயல் செய்வோரே சான்றோர் ; சிறியோர்
எனப்படுவோர் ஒன்றும்செய் யார்


27)
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
விளக்கக் குறள் :
அ)
புலம்ஐந்தும் ஆள்பவனைத் தேடிவந்து சேரும்
உலகினை ஆளும் பலம்
ஆ)
ஐம்புலன் ஆட்க்கொள்ளும் ஆற்றல் உடையோரை
என்றும் போற்றும் உலகு


28)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
விளக்கக் குறள் :
பற்றற்ற சான்றோர் பெருமை அவர்தம்
அறவழிச் சொல்உணர்த் தும்


29)
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
விளக்கக் குறள் :
அ)
நற்பண்புச் சான்றோர் பெருங்கோபம் கொண்டால்
சிறுகணம் கூடநிலைக் காது
ஆ)
நற்பண்புச் சான்றோரின் கோபம் எதிர்த்து
ஒருகணம் நிற்கஇய லாது

[ காத்தல் = இரண்டு பொருளும் தருவதாய் உணர்கிறேன்]


30)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
விளக்கக் குறள் :
அ)
அனைத்துயிர் அன்புகொண்(டு) அருள்புரிவார் அந்தணர்
என்ற அறஞ்செய் பவர்
ஆ)
அனைத்துயிர் அன்பால் அருளால் அறமாய்
அணைப்பார் அந்தணர்என் போர்

8 comments:

said...

ஊறு நாற்றம் இரண்டையும் எளிமைப்படுத்தி மிச்சதை அப்படியே ஈயடித்திருக்கலாம். ஐம்புலனைப் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம்.

அருமையான முயற்சி.

said...

அன்பின் துரை

துணைக்கூறின் - துணைகூறின்

பூண்டோர் - பூண்டார்

நன் நெறி - நன்னெறி

ஆரைந்து - ஓரைந்து

போதியச் சான்று - போதிய சான்று

பெரியார் ( ??? ) - பெரியர்

ஆட்க்கொள்ளும் - ஆட்கொள்ளும்

நல்வாழ்த்துகள்

மறுமொழி உபயம் : செல்வி ஷங்கர்
(அவருக்குத் தெரிந்தவரை)

said...

அருமை. இட்லி வடை மூலம் உங்களின் வலைப் பூவிற்கு வரும் வாய்ப்பு கிட்டியது. நல்ல முயற்சி.
தொடர வாழ்த்துக்கள்.
அடியேனும் குறைந்தது வாரம் ஒரு முறை பின்னூட்டம் மூலம் எனது கருத்துக்களையும் பதிவிட முடிவு செய்துள்ளேன்.
வாசகர் ஒருவர் கூறியது போல யாப்பு இலக்கணத்தை எளிய தமிழில் கற்பிக்க முயற்சி எடுப்போம்.(கவனிக்க - எடுப்போம் - எனது பங்கும் உண்டு. கல்லாடம், நைடதம் நூற்களை எளிமையாக விளக்க முயற்சி எடுத்து வருகிறேன். விரைவில் எனது வலைப் பூவில் எழுதுகிறேன்)

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

said...

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.