izmanam.com -->

Monday, November 09, 2009

திருக்குறளும் , என்குரலும்...!

அன்பின் உள்ளங்களே .,

திருக்குறளுக்கான எளிய விளக்கமாக (அ ) ஒத்தக் கருத்துள்ள எனது முதல் குறளையும், தொடர்ந்து அதற்கான திருக்குறளையும் ‘ஆசிடை நேரிசை வெண்பா’ வாக அமைத்துள்ளேன் .

தங்களின் மேலான அறிவுரைகளால் இலக்கினை நோக்கிச் செலுத்துங்கள் ., இயன்றதைச் செய்வேன்.

நன்றி !

[ஆசிடை நேரிசை வெண்பா :

இருகுறள்களை ஒன்று சேர்த்து, ஒரு நேரிசை வெண்பாவாக்க முயலும்போது,
முதல் குறள் 'நாள்' அல்லது 'மலர்' என்ற ஓரசைச் சீரில் முடிந்தால், அந்த ஓரசையுடன்
ஒன்றோ, இரண்டோ அசைகள் சேர்த்தால் தான், தளை தட்டாத நேரசை வெண்பா
(தனிச்சொல்லுடன்) உருவாகும். (ஏன்?) 'காசு', 'பிறப்பு' என்று
முடிந்தாலும் , பொருத்தமான எதுகையுடைய
தனிச்சொல்லைத் தேர்ந்தெடுக்க ஒன்றோ, இரண்டோ அசைகளைச் சேர்க்க நேரிடும்.
இவற்றை 'ஆசிடை நேரசை வெண்பா'க்கள் என்பர். 'ஆசு' என்பது உலோகத் துண்டுகளை
இணைப்பதற்குப் பயன்படுத்தும் பற்று.

நன்றி ; யாப்புலகம் ]

அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :
01)
எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகுக்கு என்றும்ஆண் டவன்தான் - உலவும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
-----------------------(1)

[முதல்குறள் ஈற்று = டவன் ; ஆசு = தான் ]

02)
கற்றறிந்தோர்; ஆண்டவன்தாள் ஏற்காதோர்; எல்லாம்
அறிந்தும் அறியா தவராவார் - முற்றிலும்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
----------------------(2)

[முதல்குறள் ஈற்று = தவர் ; ஆசு = ஆவார் ]


அதிகாரம் 02 : வான் சிறப்பு :..
11)
மண்ணுயிரின் வாழ்வுயர வானிலிருந்(து) காலமெல்லாம்
மண்புகும்அ மிழ்தாம் மழையது - என்றும்போல்
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
---------------(3)

[ முதல்குறள் ஈற்று = மழை; ஆசு = அது ]

6 comments:

said...

நல்ல முயற்சி... வாழ்த்துகள்

said...

அருமை, இனிமை!

said...

நல்ல முயற்சி. தொடருங்கள் துரை

said...

நல்ல முயற்சி

வாழ்த்துகள்

said...

அன்பின் துரை

வழக்கமாகப் பாராட்டும் விதமாகத்தான் மறுமொழி இடுவது வழக்கம். இடுகைகளை ஆய்வு செய்ய வேண்டியதின் விளைவாக மனத்தில் தோன்றியதை எழுதுகிறேன். வருந்தற்க!

1 : ஒத்தகருத்து - ஒத்தக்கருத்து அன்று
2 : ஆசிடை நேரிசை - ஆசிடை நேரசை அன்று

வழக்கமான இடுகைகளில் எழுத்துப்பிழை சந்திப்பிழை இருக்கலாம் - இங்கு இப்பதிவில் இடும் இடுகைகளில் இப்பிழைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆணடவன்தாள் ஏற்காதார் என்பது கருத்து முரண்பாடு தெரிகிறதே - தூய்மையான ஆண்டவனின் திருவடிகளைப் பணியாதார் என்பது குறள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மறுமொழி உபயம் : செல்வி ஷங்கர் ( அவருக்குத் தெரிந்த வரை )

said...

பிரமாதம். இலக்கணக் குறிப்பு வரைகவுக்கு அதிகமான தமிழிலக்கண அறிவு இல்லாத என் போன்றோருக்கு உங்கள் வலை தொல்காப்பியமாக இருக்கிறது. ஒரு நேரிசை வெண்பா எப்படி எழுதுவது என்று பிராக்டிகல் தலைப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு, ஸ்டேப் பை ஸ்டேப் விளக்கி ஒரு இடுகை போடுவீர்களா?


http://kgjawarlal.wordpress.com